இந்தியா லைப் ஸ்டைல் சமூகம் General

இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான மழை மற்றும் பனிப் பொழிவு; சுற்றுலா சென்ற 35 ஐஐடி மாணவர்களின் நிலை என்ன?

Summary:

heavy rain fall in himachal iit students missing

இமாச்சல் பிரதேசம் லாஹுல் சுபித்தி மாவட்டத்தின் கொக்சர் மற்றும் ஹம்தா பகுதிகளில் கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் மூலம் ஏற்பட்டுள்ள பனி மற்றும் நில சரிவில் சுமார் 120 க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கு உள்ள காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய படம்

மேலும் ரூர்கி ஐஐடி-ல் இருந்து 35 மாணவர்கள் ஹம்தா பகுதியில் மலையேறுதல் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் வரவில்லை. 

இவர்களைப் பற்றி அங்கு உள்ள காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில் ஐஐடி மாணவர்கள் காணாமல் போனது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் முகாம்களில் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அந்த ஐஐடி மாணவர்களுக்கு இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

heavy rain fall in himachal க்கான பட முடிவு

மேலும் இந்த கடுமையான பணி சரிவால் இமாச்சல் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள சாலைகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தலமான மணாலி முற்றிலும் தொடர்பிலிருந்து  துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா சென்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Advertisement