BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.. 6 உயிர்கள் பறிபோன சம்பவம்.!
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ராய நாகேஸ்வர ராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் பிரகாசம் மாவட்டம் கொமரோலுவில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் நிகழ்ச்சி முடிந்து பின்னர் மீண்டும் குண்டூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் பிரகாசம் மாவட்டம் அனந்தபூர் - அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காரானது குந்தாவில் இருந்து மார்க்காபுரம் நோக்கி பயணிகளுடன் சென்ற ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவானது சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.

இந்தக் கோர விபத்தில் காரின் இடுப்பாடுகளில் சிக்கி ராய நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வராவ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற நபர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோவில் பயணம் செய்த அபிநயா, டேனியல், ரத்னா தேவி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த ஆட்டோவில் பயணம் செய்த வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.