செல்போன் கேட்டு கணவனுக்கு பளார் விட்ட மனைவி..கூறுபோட்டு உடலை வீசி கணவன் வெறிச்செயல்.. பயங்கர சம்பவம்..!Haryana Man Killed Wife

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அதனை காவல்துறையினர் கைப்பற்றி திறந்து பார்க்கையில், நிர்வாண நிலையில் பெண்ணின் உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தியபோது, மர்மநபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேசை சாலையில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. 

பின் ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்குள்ள சர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்த நபர் தான் சவாரிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் கிராமத்திற்கு சென்ற போலீசார் விசாரணை செய்ததில் உண்மை அம்பலமானது. இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, 22 வயதான ராகுலுக்கும், 20 வயதான பிரியங்காவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவரும் நிலையில், அடிப்படை செலவுகளுக்கே சம்பளம் சரியாக இருந்துள்ளது. ஆனால் மனைவி பிரியங்கா அவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என்று சண்டை போட்டுள்ளார். மேலும் கோபத்தில் பலமுறை கணவரை அறைந்துள்ளார். 

haryana

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு வாக்குவாதமானது கைகலப்பாக மாறவே, கோபமுற்ற ராகுல் மனைவியை அடித்துக் கொலை செய்தார். இரவு முழுவதும் மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்து குழந்தையோடு இருந்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி வந்துள்ளார். பின் மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேஸில் உடலை வைத்துள்ளார்.

அத்துடன் மனைவியின் கையில் ராகுலின் பெயர் பச்சை குத்தியிருந்ததால் கையின் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார். இதன் பின்னரே ஆட்டோ பிடித்து யாரும் இல்லாத இடத்தில் சத்தம் இல்லாமல் வைத்து விட்டுவந்துள்ளார். இதனை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.