இதெல்லாம் நமக்கு தேவையா?.. இருசக்கர வாகனத்தில் அசால்ட்டாக ஸ்டண்ட்.. இளைஞரை தூக்கிச்சென்ற போலீசார்..!Gujarat Ahmedabad Youngster Stunt Later Arrested by Cops 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சிந்துபன் நெடுஞ்சாலையில் கடந்த வாரம் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர், தனது வாகனத்தின் மீது ஏறி நின்றவாறு சாகச பயணம் மேற்கொண்டு இருந்தார். 

இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி காவல் துறையினரின் கவனத்தை பெற்றது. இதனையடுத்து, விடியோவை வைத்து அதனை இயக்கிய நபரை அதிகாரிகள் தேடி வந்தனர். 

விசாரணையில், அதிகாரிகள் சாகச செயலில் ஈடுபட்ட சாஹில் என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் வைரலாக வேண்டும் என எண்ணியே இவ்வாறான செயலில் ஈடுபட்டது அம்பலமானது. அவரின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.