தாலி கட்டும் நேரத்தில் லேப்டாப்பை வைத்து மணமகன் செய்த காரியம்.! மணமகளோட ரியாக்ஷனை பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!

தாலி கட்டும் நேரத்தில் லேப்டாப்பை வைத்து மணமகன் செய்த காரியம்.! மணமகளோட ரியாக்ஷனை பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!


groom-working-sincerely-in-his-marriage-day

தாலி கட்டும் நேரத்திலும் மிகவும் பொறுப்புடன் மணமகன் லேப்டாப்பை வைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அத்தகைய கொடிய கொரோனா பரவலை கட்டுபடுத்த கடுமையாக நடவடிக்கைகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பலரது தொழில்களும் முடங்க, பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

ஆனால் இந்த சூழ்நிலையில் ஐடி கம்பெனிகள் பலவும் வீட்டிலேயே பணிபுரியும் முறையை பின்பற்றினர். ஐடி ஊழியர்கள் அனைவரும் கணினி, லேப்டாப்டின் மூலமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை மணமேடையில் லேப்டாப்பை வைத்து மிகவும் மும்முரமாக பணிபுரிந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மணமேடையில் அனைத்து சடங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மணமகன் லேப்டாப்பை வைத்து பணிபுரிந்து கொண்டுள்ளார். மேலும் அவரை கண்டு மணமகள் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் உங்களது கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என கிண்டல் செய்து வருகின்றனர்.