இந்தியா

டீக்கடையில் காரை நிறுத்த சொன்ன புதுமாப்பிள்ளை.! சிறிது நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! தவிக்கும் இளம் பெண்..!

Summary:

Groom suicide after few hours of marriage in UP

திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் புது மாப்பிளை ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷ்யந்த் கிரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணும் காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்போது டீ கடை ஒன்றில் காரை நிறுத்துமாறு மாப்பிளை தெரிவித்துள்ளார்.

டீ கடையும் வந்தது, காரை நிறுத்திவிட்டு அனைவரும் டீ குடிக்க சென்றனர். ஆனால், நீட்ட நேரமாகியும் மாப்பிளை டீ குடிக்கவும் வரவில்லை, காரிலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது மரம் ஒன்றில் தூக்கு போட்டு மாப்பிளை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மாப்பிளை ஏன் தற்கொலை செய்துகொண்டார்.? என்ன கரணம் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமான சில மணிநேரங்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement