இந்தியா

இதெல்லாம் ஒரு சாப்பாடா!! பந்தியில் ஏற்பட்ட தகராறு! மணமகளின் தம்பிக்கு மாப்பிளையால் நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்!

Summary:

Groom killed brother in law for food problem

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே ஃபரூக்காபாத் என்ற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது சாப்பாட்டு பந்தியில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை மணமகளின் தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, உயிரிழந்தவரின் அண்ணன் புனித்  கூறுகையில், இரவு 8:30 மணிக்கு மணமகன் வந்தார். பின்னர் சடங்குகள் அனைத்தும் நடந்தபிறகு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உணவு குறித்து குறைகூறினர். இந்நிலையில் வீட்டிலுள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் என் மாமாவை நோக்கி சுட்டனர். 

மேலும்  பந்தியில் தண்ணீர் கொடுத்த எனது 9 வயது நிறைந்த தம்பி பிரன்ஷுவை காரில் இழுத்து போட்டுக்கொண்டு வேகமாகச் சென்றனர். அப்பொழுது  கார் 3 பெண்கள் மீது மோதி, அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதனை தொடர்ந்து மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள்  அதிகாலை 3 மணியளவில்,  பிரன்ஷுவின் உடலை ஊரில் போட்டுவிட்டு சென்றனர். அவன்  கழுத்து நெறிக்கப்பட்டு, முகங்கள் சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தான் என கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement