இந்தியா

அடுத்த மாதம் கல்யாணம்..! நடுவே வந்த கள்ள காதல்..! பெண்ணின் தாயுடன் ஓடி போன மாப்பிள்ளையின் தந்தை..!

Summary:

Groom Father Elopes with Bride Mother before wedding at Gujarat

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துணிக்கடை வைத்திருக்கும் தொழிலதிபர் ஷர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது மகனுக்கு பெண் பார்த்துவந்த ஷர்மா அதே பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துதுள்ளார்.

இருதரப்பிலும் பேச்சு வார்த்தை முடிந்து வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து திருமணம் வேலைக்காக இரண்டு குடும்பங்களும் அடிக்கடி சந்தித்தால் ஷர்மாவுக்கும், வைர கைவினைஞரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஷர்மாவும், கைவினைஞரின் மனைவியும் தலைமறைவாகியுள்ளனனர். இதுகுறித்து இரண்டு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஷர்மாவும், கைவினைஞரின் மனைவியும் பல ஆண்டுகளுக்கு முன்னரே காதலித்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாத சூழலில் ஷர்மா தான் காதலித்த அந்த பெண்ணை வைர கைவினைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து காதலர்கள் இருவரும் சந்தித்து பேசியபோது மீண்டும் தங்கள் பழைய காதலை இருவரும் புதுப்பித்துள்ளனர். இந்தமுறையாவது ஒன்றுசேர வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய மகன் மற்றும் மகள் திருமணத்தையும் மறந்து இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் மலர்ந்து இருவரும் தப்பி ஓடிய சம்பவம்  குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement