இந்தியா

முதலிரவுகூட சரியா நடக்கல..! குடும்பத்தினர் மறைத்துவிட்டனர்..! தாலி கட்டிய சில நாட்களில் சரிந்துவிழுந்த புது மாப்பிளை..! 100 பேருக்கு வைரஸ் தொற்று..!

Summary:

Groom dead for corono after 2 days of marriage

திருமணம் முடிந்த நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினர்கள், திருமணத்தில் பங்கேற்றவர்கள் என தற்போது 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பலிகஞ்ச் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் குருகிராமில் வேலைபார்த்துவந்த நிலையில் ஜூன் 15 ஆம் தேதி அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் வேலை பார்த்த இடத்தில் இருந்து கடந்த மே மாத இறுதியில் சொந்த ஊர் திரும்பியுள்ளார் அந்த இளைஞர்.

சொந்த ஊர் வந்த அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால், திருமணத்தை தள்ளிவைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனை அடுத்து ஜூன் 15 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த உடனே இளைஞரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா இருப்பதுஉறுதி செய்யப்பட்டது. அதேநேரம், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞரும் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் இளைஞரின் உடலை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இளைஞரின் கிராமத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இளைஞரின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், 15 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டதில் தற்போதுவரை 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கு காய்ச்சல் இருப்பதை மறைத்ததால் அந்த இளைஞரும் உயிரிழந்து, தற்போது 100 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement