22 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?.. அதிரடி நடவடிக்கை.!

22 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?.. அதிரடி நடவடிக்கை.!


govt-of-india-banned-18-indian-and-4-pakistan-youtube-c

இந்திய தேசிய நலன், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 

அந்த வகையில், தற்போது மத்திய அரசினால் 18 இந்திய யூ-டியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சேனல்கள் போன்றவை என 22 யூடியூப் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு எதிரான செய்திகள், போலியான செய்திகள், உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் போலி செய்திகள் பதிவிட்ட சேனல்கள் அதிரடியா முடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாக பாஜக இரண்டாவது முறை பொறுப்பேற்றபோது, தகவல் தொழில்நுட்ப சட்ட அமைச்சகத்தை வலுப்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த நிலையில், டிஜிட்டல் ஊடகத்தை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. அதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.