இந்தியா

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்! விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! பதறவைக்கும் வீடியோ.

Summary:

Girl refuses to marry boy jumped from fourth floor

குஜராத் மாநிலம் பலான்புர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி. 21 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக அந்த பெண் தனக்கு ராகுலை பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் வேறொரு மாப்பிளையை முடிவு செய்து திருமணம் செய்துவைத்துள்ளார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத ராகுல் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராகுலின் இந்த தற்கொலை முயற்சி அங்கிருந்தவர்களுக்கு தெரியவர மிகப்பெரிய போர்வையை கீழே பிடித்து அவர் குதித்தாலும் அடிபடாத அளவிற்கு ஏற்பட்டு செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் இடையிலையே மாடியில் இருந்து ராகுல் கீழே குதித்துவிட்டார். முன்னெச்செரிக்கைக்காக போலீசாரும், மக்களும் போர்வை போன்ற துணியை பிடித்திருந்ததால் சிறு காயங்களுடன் ராகுல் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement