ஆசை மகள் செய்த அதிர்ச்சி காரியம்.! ஒரு வருடத்திற்கு பிறகு, முகம் காண கெஞ்சி துடிக்கும் பெற்றோர்!!

ஆசை மகள் செய்த அதிர்ச்சி காரியம்.! ஒரு வருடத்திற்கு பிறகு, முகம் காண கெஞ்சி துடிக்கும் பெற்றோர்!!


girl-love-marriage-with-islam-boy

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா. இவர் கடந்த ஆண்டு முகமது ரஹ்மான் அகமது என்ற இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஜுனைரா நர்மின் என தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். 

இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடங்கள் நிறைவுற்ற நிலையில், இந்திராவின் பெற்றோர்கள் தன்னுடைய மகளை மனமாற்றி லவ் ஜிகாத் மூலம் திருமணம் செய்து வைத்துள்ளனர் என புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவர்களது புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளனர்.

love marriage

அதனை தொடர்ந்து இந்திராவின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்து, திருமணமான இருவரும் மேஜராக இருந்தாலும் தான் புகார் கொடுத்தபோது ஏன் அவர்கள் காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனது மகள் பாதுகாப்பாக இல்லை.  எனது மகளின் முகத்தை பார்க்க விரும்புகிறோம். ஆனால் அவளை வலுக்கட்டாயமாக மதம்மாற்றி துபாய் அல்லது சிரியாவில் விற்க திட்டம் போட்டுள்ளனர். எனக்கு நீதி வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திரா, என்னைப்பற்றி பரப்பும் செய்திகள் போலியானது. எனது விருப்பத்திற்கு ஏற்பவே நான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இதனை செய்ய எனக்கு முழுசுதந்திரம் உள்ளது. இதுகுறித்து யாருக்காவது பிரச்சினை என்றால் அது எனக்கு தேவையில்லை என கூறியுள்ளார்.