இந்தியா வீடியோ

கைக்குழந்தையுடன் அடைக்கலம் தேடிவந்த பெண், இரக்கமே இல்லாமல் தரதரவென இழுத்து வீசிய கொடூரம்.! வைரலாகும் பகீர் வீடியோ!!

Summary:

girl harshly throw out frm school hostel

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியா கிராமத்தில் பர்வானி கன்யா ஆஸ்ரம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விடுதியில் கனமழை பெய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில்,  சந்திர காந்தா என்ற பழங்குடியின பெண் ஒருவர் தன் 3 மாத குழந்தையுடன் வந்து அடைக்கலமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விடுதியின் மேற்பார்வையாளரான சுமிலா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்து கிளம்புமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சுமிலா இதுகுறித்து தனது கணவர் ரங்லால் சிங்கிடம் கூறியுள்ளார்.

Barwani Kanya Ashram க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், சுமிலாவின் கணவர் துப்புரவாளர் ஒருவருடன் விடுதிக்குள் நுழைந்து, அந்த பெண்ணை அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார், பின்னர் அவர் அமர்ந்திருந்த துணியை பிடித்து இழுத்து அவரை தள்ளிவிடுகிறார். பின்னர் அவரது கையை பிடித்து தரத்தரவென இழுத்து, அங்கிருந்து வெளியே தள்ளியுள்ளார் .

மேலும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இதுகுறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள சுமிலாவின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement