கடனை திருப்பி தராததால் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! பதைபதைக்கும் வீடியோ காட்சி - TamilSpark
TamilSpark Logo
இந்தியா சமூகம்

கடனை திருப்பி தராததால் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! பதைபதைக்கும் வீடியோ காட்சி

கர்நாடகத்தை சேர்ந்த 30 வயது பெண் வாங்கிய கடனை திருப்பி தராததால் 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டம் கொலிகல் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ராஜமணி. இவர் அதே பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றும் சிட் பண்ட் கம்பெனியும் நடத்தி வந்துள்ளார்.

அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சில நபர்களிடம் சுமார் 50 ஆயிரம் அளவில் கடன் வாங்கியுள்ளார். அவர்கள் கடனை பலமுறை கேட்டுப் பார்த்தும் ராஜமணியால் தடனை திருப்பி செலுத்த முடியவில்லை.


இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்தவர்கள் 7 பேர் கொண்ட கும்பலை தூண்டிவிட்டு அந்த பெண்ணை நடுரோட்டில் அடித்து இழுத்து வந்துள்ளனர். பின்னர் சாலை ஓரத்தில் இருந்த கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து துடைப்பம் மற்றும் செருப்பால் சராமாரியாக அடித்துள்ளனர்.

சாலையில் சென்ற அனைவரும் வேடிக்கை பார்ப்பதை கண்டு அந்த பெண் வெட்கத்தால் குறுகியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் அந்த இடத்திற்கு சென்று ராஜமணியை மீட்டதுடன் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்துள்ளனர்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo