இந்தியா

நாள் முழுக்க காதலனுடன் ஜாலி..! வீட்டில் மறைப்பதற்காக இப்படி ஒரு பொய்யா..? விசாரணையில் அம்பலமான உண்மை..!

Summary:

Girl filed fake police complaint after roaming with boy friend

காதலனுடன் ஊர் சுற்றிவிட்டு, அதை மறைப்பதற்காக யாரோ தன்னை பாலியல் கொடுமை செய்துவிட்டதாக 16 வயது இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள சங்கரெட்டி காவல் நிலையாயத்திற்கு வந்த 16 வயது இளம் பெண் ஒருவர் அமீன்பூர் எனும் இடத்தில் தன்னை சில ரவுடிகள் சீண்டியதாகவும், பின் தனக்கு தொல்லை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

சிறுமியின் வார்த்தையை நம்பி விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, நேற்று காலை 9.30 மணி அளவில், அந்த சிறுமிக்கும் அவர் தாய்க்கும் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த சிறுமி கோவித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டில் இருந்து வெளியேறியவர் காதலனுடன் நேரம் செலவிட்டுள்ளார். காதலனுடன் வெளியே ஊர் சுற்றியதை மறைக்கவே வீட்டில் இப்படியொரு பொய்யைக் கூறியதாகவும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement