இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
காய்ந்த துணியை எடுக்க 12-வது மாடிக்கு சென்ற பெண்ணுக்கு துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

சென்னை போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது மாடியில் வசித்து வருபவர் ராஜூவ். இவரது மனைவி, நேற்று முன்தினம் வீட்டின் பால்கனியில் உலர வைத்த துணிகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது கொடியில் இருந்த ஒரு துணி நழுவி கீழே விழுந்தது.
கீழே விழுந்த துணியை பிடிக்க முயன்றபோது, ராஜூவின் மனைவி அல்கா, திடீரென நிலைதடுமாறி 12-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அல்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் அந்த குடியிருப்பு பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பலியான அல்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உலர வைத்த துணிகளை எடுத்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.