
girl dead with hugging her 1 year baby
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அவ்வாறு கடவுளின் தேசமான கேரளாவிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் அதனால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வயநாடு நிலச்சரிவில் 59 பேர் புதைந்துபோயுள்ளனர்.
இதனால் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் அருகேயுள்ள கொட்டகண்ணு சாத்தான்குளம் பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் கீது என்ற இளம்பெண் தனது ஒரு வயது குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை கண்டதும் அங்கிருந்த மீட்புக்குழுவினர் கண் கலங்கினர். மேலும் மக்களும் இதனை கண்டு கதறி அழுதனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய கீதுவின் கணவர் சரத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Advertisement
Advertisement