இந்தியா

திருமணமான 2வது நாளே இளம்பெண் செய்த அதிர்ச்சி காரியம்! கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த இறுதிதகவல்! துயர சம்பவம்!

Summary:

Girl commit suicide 2 days after getting marriage

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சைனி. இவருக்கு நேஹா என்ற 21 வயது பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்த நேஹா, திருமணமான மூன்றாவது நாள் குளித்துவிட்டு வருவதாக அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டுள்ளார். பின்னர் அவரது தந்தைக்கு போன் செய்து உடனே அவரது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். 

இந்நிலையில் அறைக்குள் சென்ற நேஹா வெகு நேரமாகியும் வெளியே வராததால் பதறிபோன சச்சின் குடும்பத்தார்கள் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் அவர்கள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு நேஹா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த நேஹாவின் தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பெரும்அதிர்ச்சியில் கதறி துடித்துள்ளார். மேலும் அங்கு அறையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் எனது மாமனார் , மாமியார் அப்பாவிகள். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேஹாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேஹாவின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement