இந்தியா காதல் – உறவுகள்

மூன்று பேரை வலையில் வீழ்த்தி திருமணம்! தற்போது மூன்று மாத கர்ப்பம்! வெளிச்சத்திற்கு வந்த இளம்பெண்ணின் அதிர்ச்சி பின்னணி!

ஆந்திர பிரதேசம், பிரகாச மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் மேட்ரிமோனியல் மூலம், திருப்பதியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என சொப்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஆஞ்சநேயலுக்கும் அவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூன்று மாத விடுமுறைக்குப் பிறகு, டென்மார்க்கிற்கு கிளம்பிய ஆஞ்சநேயலு சொப்னாவை  தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் தான் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு வேலைதான் முக்கியம் என கூறி அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயலு  டென்மார்க்கிற்கு கிளம்பிய சில நாட்களிலேயே சொப்னா உங்களது மகன் என்னை ஏமாற்றிவிட்டார். மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நஷ்ட ஈடு கொடுக்கவில்லை எனில் பெரும் விளைவுகளை சந்திப்பீர்கள் என மிரட்டியுள்ளார். இந்நிலையில் ஆஞ்சநேயலுவின் பெற்றோர்கள்  அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் சொப்னா தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது உண்மையான பெயர் ரம்யா எனவும் அவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் இருவரை திருமணம் செய்துகொண்டு பணத்தை சுருட்டியுள்ளார் என்பதும் அம்பலனமானது. இந்நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முயன்றநிலையில் அவர் 3மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காப்பகம் ஒன்றில் தங்கவைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Advertisement