10 நாட்களில் அடுத்தடுத்து 7 சிங்கங்கள் உயிரிழப்பு! பெரிய உருவத்தை கொன்ற சிறிய உயிரினம்.... கிர் தேசிய பூங்காவில் அப்படி என்னதான் நடந்தது..? அதிர்ச்சி தகவல்.!!!



gir-forest-lions-death-babesia-infection-gujarat

குஜராத்தின் புகழ்பெற்ற கிர் காடுகளில் கடந்த 10 நாட்களில் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் வனத்துறை அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவற்றில் 4 குட்டி சிங்கங்களும், 3 பெரிய சிங்கங்களும் அடங்குகின்றன. இதையடுத்து பாதிப்பு பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

10 நாட்களில் 7 சிங்கங்கள் உயிரிழப்பு

உயிரிழப்பு குறித்து குஜராத் வனத்துறை அமைச்சர் அர்ஜுன் மொத்வாடியா மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, பெரிய சிங்கங்கள் இயற்கை காரணங்களால் இறந்திருக்கலாம் எனவும், குட்டி சிங்கங்கள் பேபீசியா தொற்று பாதிப்பால் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் சிவப்பு ரத்த அணுக்களை தாக்கும் இந்த ஒட்டுண்ணி தொற்று, தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் வேகமாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படலாம் என விலங்கு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

முன்னெச்சரிக்கையாக 17 சிங்கங்கள் தனிமைப்படுத்தல்

பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க, ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்ட 17 சிங்கங்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தனிமைப்படுத்தியுள்ளனர். அவற்றின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தகவலின்படி, புழு நீக்க சிகிச்சைகள், ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் கால்நடை பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன

உயிரிழந்த சிங்கங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள கிர் காடு பகுதிகளில் இருக்கும் சில சிங்கங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இதேபோன்ற பேபீசியா தொற்று காரணமாக 2018-ம் ஆண்டில் 11 சிங்கங்கள் உயிரிழந்திருந்தது நினைவுகூரப்படுகிறது. தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை உறுதியளித்துள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : தவெக அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மருத்துவமனையில் அவசர அனுமதி! அரசியலில் பரபரப்பு....!!!