விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிவு; மயங்கி விழுந்த மக்கள் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிவு; மயங்கி விழுந்த மக்கள் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!


gas leakage at visakapatinam

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தை அடுத்துள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG Polymers தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1000 பேருக்கு மேல் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷவாயுவானது அந்த தொழிசாலையை சுற்றி உள்ள 3 கிராம மக்களை பாதித்துள்ளது. இதனால் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gas leak

அந்த கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 100 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுபாதிக்கப்பட்டுள்ளனர்.