முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி.! ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி.! ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!


former rajasthan minister passed away

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் களத்தில் பணியாற்றும் தடுப்பு பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். அதேபோல அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரியான சாகியா இனாம் சில நாட்களுக்கு முன்பு, மூச்சுத்திணறல் பாதிப்பால் ராஜஸ்தான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். 

இவருக்கு ஒரு மகள் உள்ளார். ராஜஸ்தானின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் சாகியா இனாம். இவர் 3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.