பத்மபூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதலமைச்சர்.!

பத்மபூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதலமைச்சர்.!



former chief minister avoid award

மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். 

பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி  புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். அவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் விருது வேண்டாம் என கூறியுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் 2000 முதல் 2011 வரை மேற்கு வங்காள மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதை நிராகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.