இந்தியா Budget2019

பட்ஜெட் தாக்கல் செய்ய வழக்கத்திற்கு மாறாக புதிய முறையை கடைபிடித்த புதிய நிதி அமைச்சர்!

Summary:

Fm carries the files in red cloth

இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்கும் பாஜக தலைமையிலான கூட்டணியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

புதிதாக நிதி அமைச்சர் பொறுப்பேற்றிற்கும் அமைச்சர் நிர்ளலா சீத்தாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அமைச்சர் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

அப்போது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பைல்களை அமைச்சர் நிர்மலா சீத்தாராமல் சிகப்பு நிற துணியால் சுற்றி கொண்டு வந்திருந்தார். இதுவரை இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் அனைவரும் சூட்கேஸினை தான் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கத்தை நிர்மலா சீத்தாராமன் ஏன் மாற்றியுள்ளார் என்று தெரியவில்லை.


Advertisement