ஓநாய் சந்திரகிரகணம் இன்று..! வெறும் கண்களால் நிலவை பார்க்கலாமா.? பார்த்தால் என்ன ஆகும்..?

ஓநாய் சந்திரகிரகணம் இன்று..! வெறும் கண்களால் நிலவை பார்க்கலாமா.? பார்த்தால் என்ன ஆகும்..?


First Lunar Eclipse 2020

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று நடக்க உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி கடக்கும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனில் இருந்து வரும் நிலவுக்கு செல்லும் ஒளியை பூமி தடுக்கும்போது சந்திரனின் ஒளி மங்கும்.

இந்த ஆண்டில் மொத்தம் 4 சந்திரகிரகணங்கள் நடக்க இருக்கும் நிலையில் முதல் சந்திர கிரகணம் இன்று நடக்க உள்ளது. இன்று நடக்க இருக்கும் கிரகணத்தின்போது சந்திரன் முழு இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால் இதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என பெயர் வைத்துள்ளது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா.

lunar eclipse

மேலும், இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் நாசா கூறியுள்ளது. இன்று இரவு சரியாக 10.37 மணிக்கு இந்த கிரகணம் அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிரகணத்தின்போது உணவு உண்ணுதல், வெளியே செல்தல் போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடலாம் என்றும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.