இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் உயிர் இழப்பு..! உறுதி செய்த ஆய்வு முடிவுகள்..! உச்சகட்ட பதற்றம்.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100 கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை 4000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் இந்தியாவில் முதல் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதை அரசு உறுதி செய்துள்ளது. சவுதியில் இருந்து இந்தியா திரும்பிய கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறியை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் நேற்று மரணமடைந்தார். இருப்பினும் அவர் கொரோனாவால்தான் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே உயிர் இறந்தவரின் இரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவரது மரணத்திற்கு காரணம் கொரோனாதன் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில் இதுவே முதல் உயிர் இழப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.