
14 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! தீயணைப்பு வீரர்களின் வெகு நேர முயற்சி..!! பின்னர் நடந்த சம்பவம்..!!
மும்பை வடக்கு கண்டிவளி என்ற பகுதியில் ஹன்சா ஹெரிடேஜ் என்ற பெயரில் 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள 14 வது மாடியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். பின்னர் வெகுநேரத்திற்க்கு பிறகு தீயை அணைத்து , தீ விபத்தில் சிக்கிய 2 பேரை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த இருவரும் கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் போலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலிசார் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்தும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
Advertisement
Advertisement