திடீரென ஏற்பட்ட தீ விபத்து! பதறி ஓடிய மாணவ மாணவிகள் உட்பட 20 பேர் பலி!

திடீரென ஏற்பட்ட தீ விபத்து! பதறி ஓடிய மாணவ மாணவிகள் உட்பட 20 பேர் பலி!


fire accident in surat

சூரத்தில் நேற்று மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். சூரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், கட்டடத்தில் இருந்து குதித்த 15 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.   

இது குறித்து சூரத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், 3ஆவது மாடியில் இயங்கி வந்த கல்வி பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர்.  அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். 

இந்த தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பததுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி உடனடியாக தக்க உதவிகள் செய்ய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தொண்டர்களையும் களத்தில் இறங்கி உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.