அடக்கொடுமையே... கொசு தொல்லைக்கு பயந்து ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட விபரீதம்... 6 பேர் பலி!!
அடக்கொடுமையே... கொசு தொல்லைக்கு பயந்து ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட விபரீதம்... 6 பேர் பலி!!

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவில் தொல்லைக்கு பயந்து படுக்கை பகுதிக்கு அருகே கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்து விட்டு வீட்டில் உள்ள அனைவரும் உறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நடு இரவில் கொசுவர்த்தி சுருள் அவர்கள் படுத்திருந்த மெத்தை மீது விழுந்துள்ளது.
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீ பிடித்துள்ளது. நச்சுப்புகை வெளியேறியதில் வீட்டில் படுத்திருந்த அனைவரும் மயங்கி கிடந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 மட்டும் தீ விபத்திருந்து தப்பித்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.