
Summary:
fire accident imn factory
மகாராஷ்டிரா மாநிலம், துலே பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிற்சாலையை சுற்றிலும் புகைமண்டலமாக மாறியது. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர். 50 க்கு மேலானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 40க்கு மேலானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு ஏற்பட்ட வெடிவிபத்து அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
Advertisement
Advertisement