நடுரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கிடையே வெடித்த அடிதடி மோதல்.! பகீர் கிளப்பும் வீடியோ.!

நடுரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கிடையே வெடித்த அடிதடி மோதல்.! பகீர் கிளப்பும் வீடியோ.!


fight-with-college-students-video-viral

உத்தர பிரதேசம் காஜியாபாத் நகரில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையின் நடுவே பயங்கரமாக மோதி கொண்டுள்ளனர். அதாவது அவர்கள் நடுசாலையில் திடீரென ஒருவரை ஒருவர் அடித்து கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். அப்பொழுது அந்த சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதி பின் நின்றுள்ளது.

கார் மோதிய அந்த மாணவர் எழுந்ததும், அவரை சிலர் அடித்து தாக்கியுள்ளனர்.இதற்கிடையில் மற்ற மாணவர்கள் பலர் இதனை கண்டு அலறி அடித்து அங்கிருந்து ஓடியுள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காஜியாபாத் போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த மோதலில் தொடர்புள்ள மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்லூரியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த மோதல் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.