இந்தியா

சக்களத்தியுடன் சண்டை... கோபத்தில் குடும்பத்தையே கொளுத்திய பெண்!...

Summary:

சக்களத்தியுடன் சண்டை... கோபத்தில் குடும்பத்தையே கொளுத்திய பெண்!...

கணவர் தனக்கு ஆதரவாக இல்லாததால் மனமுடைந்த மனைவி குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தர்பங்கா மாவட்டத்தில் முகமது குர்ஷித் ஆலம் என்பவர் அவரது மனைவி குல்ஷன் கதுன் என்பவருடன் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை அதனால் ரோஷன் கதுன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ரோஷன் கதுன் குழந்தை உண்டாகி உள்ளார். இதனால் முதல் மனைவியான குல்ஷன் கதுனுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. எனவே முகமது குர்ஷித்தின் முதல் மனைவி இரண்டாவது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது மாமியாரும் இரண்டாவது மனைவிக்கு ஆதரவாக இருந்ததால், குல்ஷன் நேற்று இரவு இருவருடனும் சண்டை போட்டதாக தெரிகிறது. கணவர் குர்ஷித்தும் தனக்கு ஆதரவாக இல்லாத நிலையில், அதிகாலையில் முதல் மனைவியான குல்ஷன் தன் மீதும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதன் காரணமாக கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடும்ப சண்டையில் ஒட்டுமொத்த குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணைக்காக தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement