மகளுக்கு வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்.! தந்தை போட்ட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு.!

மகளுக்கு வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்.! தந்தை போட்ட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு.!



father complaint on Matrimonial service

ஹரியானா மாநிலம் பன்ச்குலாவ் நகரைச் சேர்ந்த பவன் குமார் ஷர்மா என்பவர் தனது மகளுக்கு வரன் தேடுவதற்காக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் திருமண தகவல் மையத்தில் 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளார். 

ஆனால் அந்த திருமண தகவல் மையம் குறிப்பிட்ட நேரத்தில் வரன் பார்த்து கொடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் திருமண தகவல் மையத்திற்கு எதிராக இரண்டுவருடத்திற்கு முன்பு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Matrimonial service

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு 15000 ரூபாய் நஷ்ட ஈடு தொகையாகவும், அவர் திருமண தகவல் மையத்திற்கு செலுத்திய தொகையில் 80% பணம் கொடுக்கவும், வழக்கு தொடர்ந்த செலவுக்காக 7000 ரூபாய்  கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.