மகனை தூணில் கட்டிவைத்து அடிக்கும் தந்தை! ஏன் தெரியுமா? வைரல் வீடியோ

Father beats son tying in pillar


father-beats-son-tying-in-pillar

உத்திர பிரதேசத்தில் டிக்-டாக் ஆப்பில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட மகனை ஊர் நடுவே தூணில் கட்டிவைத்து தந்தை அடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் டிக்-டாக் ஆப் மிகவும் பிரபலமாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் வீடியோக்களை நகைச்சுவையாக அதில் பதிவேற்றி வருகின்றனர். சில சமயங்களில் அந்த வீடியோக்களே அவர்களுக்கு சிக்கலாகிவிடுகிறது. 

utthar pradesh

உத்திர பிரதேசம், சாரான்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு மற்றொரு பெண்ணின் புகைப்படத்தை அந்த பெண்ணின் அனுமதியின்றி வீடியோவாக உருவாக்கி டிக்-டாக் ஆப்பில் பதிவேற்றியுள்ளார். இதனைக் கண்ட அந்த பெண் தன் பெற்றோர் மூலம் ஊர் பஞ்சாயத்தை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து அந்த இளைஞனையும், அவனது தந்தையையும் பஞ்சாயத்திற்கு அழைத்த ஊர் பெரியவர்கள், இளைஞனை தூணில் கட்டிவைத்து அவனது தந்தையையே கம்பால் அடிக்க செய்துள்ளனர். அவரோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் அவனை சராமாரியாக அடித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.