இந்தியா

லஞ்சம் கேட்ட தாசில்தாரின் வாகனத்தில் எருமையை கட்டி விவசாயி வினோதமாக போராட்டம்! அதிர்ச்சி வீடியோ

Summary:

farmer tied Buffalo in thasildhar jeep

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தாசில்தாரின் ஜீப்பில் எருமையை கட்டிவைத்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த விவசாயி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் தனக்கென்று சிலர் வேலைகளை முடித்துத் தர மனு கொடுத்துள்ளார். அதனை பார்த்த தாசில்தார் அந்த வேலைகளை முடிப்பதற்கு விவசாயிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த விவசாயி தனது வீட்டில் நின்று கொண்டிருந்த ஒரு எருமையை பிடித்து வந்து தாசில்தார் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த அவரது ஜீப்பில் கட்டி வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள நபர் இந்தியா முழுவதும் விவசாயிகள் இப்படி தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் பெரிய தொழிலதிபர்களிடம் இப்படி நடந்து கொள்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 


Advertisement