திருச்சி அருகே பயங்கரம்... "உறங்கி கொண்டிருந்த விவசாயி எரித்து கொலை..." மர்ம நபருக்கு வலை வீச்சு.!!



farmer-burnt-to-death-near-trichy-police-investigates

திருச்சி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விவசாயி எரித்து கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத். விவசாயியான இவர் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஏரித்திருக்கிறது. இந்தக் கொடூர தாக்குதலில் வலியால் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

tamilnadu

காவல்துறை விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு... "செல்போனில் பெண்கள், சிறுமிகளின் ஆபாச படம்..." வட மாநில இளைஞர் கைது.!!

டி.எஸ்.பி ஆய்வு

மேலும் இந்த கொலை தொடர்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவரது தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. விவசாயி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!