ஈரமில்லா மனசு..... 60 வயது முதியவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற குடும்பத்தினர்.! அதிர்ச்சி காரணம்.!



family members killed old man

ஒடிசா மாநிலம் கொராபுத் மாவட்டத்தில் மணியாக் என்ற முதியவர் தனது மகனின் வீட்டின் கூரையை கிழித்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் மற்றும் அவரது மருமகள் ஆகியோர் அந்த முதியவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

60 வயது நிறைந்த முதியவர் என்று கூட பார்க்காமல் அவரை வெகு நேரமாக மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் முதியவர் மணியாக் கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 அவர்கள் முதியவரை சரமாரியாக தாக்கியதில் மின்கம்பத்தில் கட்டிய படியே அவரது உயிரை விட்டுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த முதியவரை எரித்துள்ளனர். அங்கு நடந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து அதனை போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.