சாலையில் சிதறி கிடந்த வைரக்கற்கள்?! குவித்த மக்கள்!!



fake Diamond in gujart road

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே வரச்சா என்னும் பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் சாலையில் விழுந்து விட்டதாக வதந்தி ஒன்று அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளது.

இதனை நம்பி அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் உள்ள தெருவில் குவிந்து தீவிரமாக வைரக் கற்களை தேடி அலைந்தனர். வதந்தியை நம்பிய மக்கள் அலைகடலென திரண்டு வெகு நேரமாக தேடியுள்ளனர். 

அதன் பின் அது சேலை மற்றும் கவரிங் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க வைரம் எனப்படும் விலைகுறைந்த கற்கள் என தெரியவந்துள்ளது.

பின்னர், வைரக்கற்களை தேடி அலைந்து களைப்பான மக்களுக்கு  இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.