பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க இன்ஸ்டாவில் போலி கணக்கு... பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றிய கணவர்...!!

பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க இன்ஸ்டாவில் போலி கணக்கு... பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றிய கணவர்...!!


Fake account on Instagram to take revenge on estranged wife...Husband uploaded photo of woman...

புதுச்சேரியில், தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியின் பெயரில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி, அந்த பெணின் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்த, முன்னாள் கணவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் குடியிருக்கும், 21 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டு, தன் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதாக புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒருவர் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் கீர்த்தி, இது குறித்து விசாரணை செய்ததில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த பெண்ணினுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது, அந்த பெண்ணுடைய முன்னாள் கணவர் மணிகண்டன் (23) என தெரியவந்தது.

மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவருக்கும் அந்த பெண்ணிற்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது என்றும், தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், அந்த பெண்ணின் மீதுள்ள கோபத்தால் அவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் போலி கணக்கு தொடங்கி பதிவேற்றம் செய்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.