விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
தலித் இளைஞரை காலணியை நக்க வைத்த மின் ஊழியர்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..!!
சென்ற வாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்வலை அடங்குவதற்குள் தற்போது அதேபோல் இன்னொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா என்னும் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேந்திர சமர். இவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த ஆறாம் தேதி அன்று அவரது தாய் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கே மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜேந்திர சமர் அவரே சரி செய்ய முயன்றுள்ளார். அந்நேரம் பார்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தேஜ்பாலி சிங் படேல் என்பவர் அங்கு வந்துள்ளார். அங்கு ராஜேந்திர சமர் சரி செய்ய முயன்றதை அடுத்து கடுமையான கோபம் கொண்ட மின்வாரிய ஊழியர் அவரது சாதியைக் கொண்டு அவரை திட்டியுள்ளார்.
மேலும் அவரை கீழே தள்ளி சரமரியாக அடித்துள்ளார். அவரது மார்புக்கு மேல் ஏறி நின்று கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது செருப்பை நக்க வைத்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை பார்த்த மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து வரும் இப்படியான சம்பவத்தினால் ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிர்க்கட்சிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.