"கொரோனாவை வெல்லும் சக்தியை இந்த ஈஸ்டர் நமக்கு தருவதாக" - பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி!

"கொரோனாவை வெல்லும் சக்தியை இந்த ஈஸ்டர் நமக்கு தருவதாக" - பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி!



easter-may-ivercome-covid19-pm-modi

இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கத்தால் ஈஸ்டர் பண்டிகை வழக்கம் போல் இல்லாமல் மிகவும் எளிமையாக வீடுகளிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக ஈஸ்டர் பண்டிகைக்கு மூன்று நாட்கள் முன்பிலிருந்தே அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூடி வழிபாடு நடத்துவர். சனிக்கிழமை நள்ளிரவில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா சடங்குகள் வெகு விமரிசையாக நடைபெறும்.

Easter 2020

ஆனால் இந்த ஆண்டு மக்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு தொலைக்காட்சி வாயிலாக ஈஸ்டர் சடங்குகளை கண்டுகளித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தியை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

அதில், "அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள். ஆண்டவர் கிறிஸ்துவின் உயர்ந்த எண்ணங்களையும், குறிப்பாக ஏழை எளியவர்களுக்காக அவர் ஆற்றிய தொண்டினையும் நாம் நினைவு கூர்வோம். இந்த ஈஸ்டர் பண்டிகை நாம் அனைவருக்கும் கொரோனாவை வெல்ல மற்றும் வலிமையான உலகை உருவாக்கும் சக்தியை நமக்கு அளிப்பதாக" என கூறியுள்ளார்.