இந்தியா

மாண்டுபோன மனிதம்.. சமோசாவை கேட்காமல் எடுத்து சாப்பிட்டதற்கு கொலை.. நெஞ்சை அதிரவைக்கும் சம்பவம்.!

Summary:

மாண்டுபோன மனிதம்.. சமோசாவை கேட்காமல் எடுத்து சாப்பிட்டதற்கு கொலை.. நெஞ்சை அதிரவைக்கும் சம்பவம்.!

உணவக உரிமையாளரிடம் கேட்காமல் சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபால் பகுதியில் ஒருவர் சமோசா கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், மதுபோதையில் உணவகத்தில் நுழைந்த வினோத் அஹிர்வர் என்பவர் யாரிடமும் எதுவும் கேட்காமல் அங்குள்ள சமோசாவை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனை கண்டு கோபமடைந்த உணவக உரிமையாளர் வினோத்திடம் இது குறித்து கேட்ட நிலையில், இவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதால், கடை உரிமையாளரும், அவரது மகனும் சேர்ந்து வினோத்தின் தலையில் ஒரு கட்டையால் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.  

இதில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவர, அவர்கள் உணவக உரிமையாளர் ஹரிசிங் மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.


Advertisement