தண்ணீர் பிடித்து வராத மகனை கொன்ற தந்தை,.. போதையில் செய்த கொடூரம்..!

தண்ணீர் பிடித்து வராத மகனை கொன்ற தந்தை,.. போதையில் செய்த கொடூரம்..!


drunk-man-allegedly-kills-son-10-for-not-filling-water-

வீட்டிற்கு தண்ணீர் பிடித்து வர மறுத்த பத்து வயது மகனை அவரது தந்தை போதையில் அடித்துக் கொன்றுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர் மது அருந்திய நிலையில் தனது மகளிடம் வீட்டுக்கு தண்ணீர் பிடித்து வரச் சொல்லி சொல்லியுள்ளார். சிறுவன் தந்தை சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரமடைந்த அவர் தனது மகள் என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளார். இதில் காயமடைந்த அவரது மகன் பேச்சு மூச்சின்றி அசைவற்று கிடந்துள்ளான்.

இதைக்கண்ட சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக கூறி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றம்சாட்டப்பட்டவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும், அற்ப விஷயங்களுக்காக மகனை அடிக்கும் பழக்கத்தை வாடிக்கையாக கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.