இந்தியா

ஒரு நொடி லேட்டாயிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்!! வைரல் வீடியோ..

Summary:

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் கால்தடுக்கி கீழே விழுந்தநிலையில், ரயில் விபத்தில் இருந்த

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் கால்தடுக்கி கீழே விழுந்தநிலையில், ரயில் விபத்தில் இருந்து நொடியில் உயிர்தப்பிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வயதான முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அந்த முதியவர் நிலைதடுமாறி தவறி ரயில்வே பாதையில் விழுந்துள்ளார். அப்போது ரயில் ஒன்று அந்தப்பாதையில் வந்துகொண்டிருக்க, முதியவர் தண்டவாளத்தில் விழுந்துகிடப்பதை கவனித்த ரயில் ஓட்டுநர் சமயோஜிதமாக ரயிலின் அவசர பிரேக்கை பிடித்துள்ளார்.

இதனால் ரயில் உடனே நின்றுள்ளது. இருப்பினும் முதியவர் எந்த காயங்களும் இல்லாமல் ரயிலின் முன்புறத்தில் மாட்டிகொண்டநிலையில், அங்கிருந்தவர்கள் ஓடிவந்து முதியவரை ரயிலின் அடியில் இருந்து வெளியே எடுத்து காப்பாற்றுகின்றனர். நொடியில் உயிர் போயிருக்கவேண்டியநிலையில், முதியவர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பிய இந்த சம்பவம் பார்ப்போரை வியக்கவைத்துள்ளது.


Advertisement