நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
ஒருநாளைக்கு இருமுறை.. அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வந்தது புதிய அசத்தலான திட்டம்!

கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை எனவும்,அதனால் அவர்களது உடலில் பல பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் அமல்படுத்தியது போன்று கர்நாடகாவிலும் தண்ணீர் குடிக்க மட்டும் காலை மற்றும் நண்பகலில் 2 முறை குடிநீர் பெல் அடிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் குடிநீர் பெல் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பபட்டுள்ளது.
அதில் காலை ஒரு முறை, மதிய உணவுக்கு பின் ஒருமுறை என ஒரு நாளைக்கு 2 முறை குடிநீர் பெல ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் நாள் ஒன்றிற்கு 20 நிமிடம் தண்ணீர் குடிப்பதற்க்கு ஒதுக்க வேண்டும். மேலும் இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் கண்ட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.