இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! அதிரடியாக குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! அதிரடியாக குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!


dramaticdramatic-change-in-cooking-oil-prices-change-in

பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையில் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுவது எண்ணெய் தான். நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே சமையல் எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது.

குறிப்பாக இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60% வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வந்ததால் இந்தியாவிலும் அதன் எதிரொலியாக எண்ணெய் விலை அதிகரித்தது.

Cooking oli

அதிலும் குறிப்பாக சில்லறை விற்பனையில் எண்ணெய் விலை  கடுமையாக உயர்ந்ததால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக எண்ணெய் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் சில அதிரடி முடிவுகளால் சில மாதங்களாக சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் இருந்தது. இதன் விளைவாக எண்ணெய் விலையில் மாற்றம் காணப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ 10 குறைக்கப்பட்டு ரூ180 லிருந்து 170 ஆக குறைந்துள்ளது.

மேலும் கடுகு எண்ணெய் ரூ 3 குறைக்கப்பட்டு ரூ173 லிருந்து 170 ஆகவும், பாமாயில் லிட்டருக்கு ரூ19 குறைக்கப்பட்டு ரூ138 லிருந்து  ரூ119 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது