வரதட்சணை கொடுமையால் 22 வயது பெண் கொலை... 17 நாட்கள் உயிருக்கு போராட்டம்.!! கணவன், நாத்தனார் கைது.!!



dowry-issue-woman-forced-to-drink-acid-died-after-17-da

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 22 வயது இளம் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபிஸா. 22 வயதான இவருக்கு கடந்த வருடம் காலகேதா பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நிறைய நகை மற்றும் ரொக்கப் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

India

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி கூடுதல் வரதட்சணையை உடனடியாக தரவேண்டும் என வற்புறுத்திய குல்ஃபிஸாவின் கணவர் மற்றும் நாத்தனார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த குல்ஃபிஸா முராதாபாத் நகரிலுள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 17 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: "கள்ளக்காதல் கேக்குதோ... " கொலையில் முடிந்த சந்தேகம்.!! தந்தையை காட்டிக் கொடுத்த சிறுமி.!!

தனது மகள் கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குல்ஃபிஸா தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் பெண் வரதட்சணையால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: மது விற்ற மூதாட்டி சிறையில் மர்ம மரணம்... காவல்துறை விசாரணை.!!