நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"கள்ளக்காதல் கேக்குதோ... " கொலையில் முடிந்த சந்தேகம்.!! தந்தையை காட்டிக் கொடுத்த சிறுமி.!!
மும்பையின் புறநகர் பகுதியில் மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவன் அவரை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவரது 7 வயது மகள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவி மும்பையின் உரண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ராம்ஷிரோமணி சாஹு (35). இவரது மனைவி ஜக்ராணி (32). இந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அதிகாலையில் ஜக்ராணி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் தனது மனைவி அறைக்குள் பூட்டிக்கொண்டு உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக ராஜ்குமார் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விபத்து மற்றும் தற்கொலை வழக்காக காவல்துறையினர் பதிவு செய்தனர். எனினும் அந்த தம்பதியினரின் மகள் தனது தந்தை, அம்மாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றதாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்து காவல் துறை நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவியை எரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகமே இந்தக் கொடூர சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!
தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருந்ததாக சந்தேகப்பட்டிருக்கிறார் ராஜ்குமார். இதனைத் தொடர்ந்து மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவியின் மீது ஆத்திரமடைந்த ராஜ்குமார், தனது மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து அவரது கை கால்களை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருக்கிறார். இதனை காவல்துறையிடம் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!