ஷாக் நியூஸ்.! கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது.!

ஷாக் நியூஸ்.! கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது.!


 don't waiver for loan Full interest

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வேகமாக பரவியதால் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வங்கி உள்ளிட்ட சேவைகள் முடங்கியது. பொதுமக்களும் பலர் வேலைவாய்ப்பை இழந்து வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வந்தனர்.

இந்தநிலையில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

corona

இந்தநிலையில், ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன்களுக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. 

எனவே முழு வட்டியை தள்ளுபடி செய்தால் அது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்குரிய கடன்களுக்கு முழு வட்டியை தள்ளுபடி செய்ய இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.