உயிருடன் இருக்கும் மனிதம், உறுதி செய்த இளைஞர்கள்; நாயை மரணத்தின் இறுதி நொடியில் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்.!

உயிருடன் இருக்கும் மனிதம், உறுதி செய்த இளைஞர்கள்; நாயை மரணத்தின் இறுதி நொடியில் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்.!


Dog Rescued from Death 


வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் காலநிலை மாறுபாடு காரணமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. 

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஸ்தம்பித்துப்போன டெல்லி நகரம் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறது. பல பகுதிகளை ஆட்கொண்டு இருந்த வெள்ளம் மெல்ல வழிந்தோடுகிறது.

இந்நிலையில், நாய் ஒன்று மழை வெள்ளத்தினால் ஏற்பட்டு இருந்த குப்பை நிறைந்த தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராட, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் விரைந்து செயல்பட்டு அதன் உயிரை காப்பாற்றினார்.